Take a fresh look at your lifestyle.

பேஸ்மேக்கர் மூலம் வெற்றிகர சிகிச்சை

85

எம்ஜிஎம் ஹெல்த்கேர் மருத்துவமனையில் முதிய நோயாளியின் சிக்கலான இதயத் துடிப்பு கோளாறுக்கு இரு அறை உண்மையான லீட்லெஸ் (Leadless / Wireless) பேஸ்மேக்கர் மூலம் வெற்றிகர சிகிச்சை

 

 

 

இந்நோயாளிக்கு அட்ரியோவென்ட்ரிகுலர் பிளாக் (இதய மேலறையில் அடைப்பு எனும் அரிதான பிரச்சனை இருப்பது கண்டறியப்பட்டது. உயிருக்கு ஆபத்தான குறைவான இதயத் துடிப்பு கோளாறை இது

 

ஏற்படுத்தியிருந்தது WWER DR உண்மையான டூயல்-சேம்பர் வீட்லெஸ் பேஸ்மேக்கர்

 

எனும் நவீன சிகிச்சை முறை மூலம் இயல்பான இதயத் துடிப்பு மீட்டெடுக்கப்பட்டுள்ளது பாதுகாப்பான மற்றும் திறன்மிக்க ஐச்சிகிச்சையில் குறைவான ஊடுருவலுள்ள தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டது

 

பிளாக் சென்னை டிசம்பர் 19, 2005 தமிழ்நாட்டில் உயர்சிகிச்சைக்கு புகழ்பெற்ற சென்னை. எம்ஜிஎம் ஹெல்த்கேர் மருத்துவமனையில் அனுமதிக்கபட்ட சென்னையைச் சேர்ந்த ல வயதான நோயாளிக்கு அட்ரியோவென்ட்ரிகுலர் காரணமாக குறைந்த இதயத் துடிப்பு ஏற்பட்டது இந்த ஆபத்தான மற்றும் சிக்கலான பாதிப்புக்கு வெற்றிகரமாக சிகிச்சை அளிக்கப்பட்டது இவருக்கு அவசர சிகிச்சை செயல்முறையாக AVER DR உண்மையான டூயல் சேம்பர் லீட்லெஸ் பேஸ்மேக்கர் பொருத்தப்பட்டது இது இந்தியாவின் மிகச் சில மையங்களில் மட்டுமே கிடைக்கக்கூடிய அறுவை சிகிச்சையின் தழும்புகள் ஏதுமில்லாத குறைந்த ஊடுருவலுள்ள அடுத்த தலைமுறை நவீன சிகிச்சை முறையாகும்

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது நோயாளியின் இதயத் துடிப்பு ஒரு நிமிடத்திற்கு 4 என்ற விகிதத்தில் இருந்தது ஆரம்பகட்ட சோதனைகளில் மருந்துகளின் பக்கவிளைவுகள் எலக்ட்ரோலைட் சமநிலையின்மை, தைராய்டு கோளாறு அல்லது இதயத்தில் கரோனரி தமனி நோய் போன்றவை இல்லை என்பது உறுதி செய்யப்பட்டது. இருப்பினும், அவரது நிலை மிக வேகமாக மோசமடைந்து ஹை-கிரேடு ஏவி பிளாக் பிரச்சனை ஏற்பட்டது. இதனால் இதயத் துடிப்பு நிமிடத்திற்கு 28-ஆகக் குறைந்து அவருக்கு மயக்கம், இதய செயலிழப்பு அல்லது திடீர் மாரடைப்பு ஏற்படும் அபாயம் உருவானது விரிவான பரிசோதனைக்குப் பிறகு அவருக்கு சேதண்ட் டிகிரி ஏவி பிளாக், மொபிட்ஸ் வகை இருப்பது கண்டறியப்பட்டது. இது இதயத்தின் மேல் அறையிலிருந்து கீழ் அறைக்கு மின் தூண்டுதல்கள் சரியாகச் செல்லாத பாதிப்பு நிலையாகும்

 

மேம்பட்ட நிரந்தர பேஸ்மேக்கர்-ஐ பொருத்துவதற்கு முன் உயிருக்கு ஆபத்தான நிலையை சீராக்க தற்காலிக பேஸ்மேக்கர் (temporary pacemaker) உதவியுடன் இந்நோயாளிக்கு முதலில் சிகிச்சை அளிக்கப்பட்டது மேம்பட்ட டூயல் சேம்பர் வீட்லெஸ் பேஸ்மேக்கர் ஐ பொருத்துவது மிகவும் நுட்பமான ஒரு மருத்துவச் உட்செலுத்தி செயல்முறையாகும். இதற்கு கத்தீட்டரை துல்லியமாக இதயப்பகுதிக்கு கொண்டு செல்வது, பேஸ்மெக்கர்.ஐ சரியான இடத்தில் பொருத்துவது மற்றும் இதயத்தின் மேல் மற்றும் கீழ் அறைகளுக்கு இடையிலான துல்லியமான ஒத்திசைவை உருவாக்குவது ஆகிய செயல்முறைகளை நிபுணத்துவத்துடன் மேற்கொள்வது அவசியமாகும்.

 

நவீன பேஸ்மேக்கர்-ஐ பொருத்தும் இச்சிகிச்சையை எம்ஜிஎம் ஹெல்த்கேர் மருத்துவமனையின் இன்டர்வென்ஷனல் கார்டியாலஜி, ஸ்ட்ரக்சரல் மற்றும் எண்டோவாஸ்குலார் இன்டர்வென்ஷன்ஸ் பிரிவின் மூத்த ஆலோசகர் டாக்டர் பாபு ஏழுமலை தலைமையிலான மருத்துவக் குழுவினர் வெற்றிகரமாக மேற்கொண்டனர்.

 

இது குறித்து டாக்டர் பாபு ஏழுமலை கூறுகையில், வழக்கமான பேஸ்மேக்கர்களைப் போல AVEIR DR பேஸ்மேக்கர்-க்கு வயர்கள் மற்றும் அறுவை சிகிச்சை மூலம் தோலுக்கு அடியில் தனி பாக்கெட் உருவாக்க தேவையில்லை. அறுவை சிகிச்சையின் கீறல்கள் இல்லாமல் இது பொருத்தப்படுவதே இதற்கு அறுவை சிகிச்சையின் மூலம் காரணம் இதனால், வயர்கள் மற்றும் உருவாக்கப்படும் பாக்கெட் தொடர்புடைய சிக்கல்கள் தவிர்க்கப்படுகின்றன. மேலும் இது நோய்த்தொற்று ஏற்படும் அபாயத்தைக் குறைப்பதுடன். இயற்கையான இதயத் துடிப்பு ஒத்திசைவைப் பாதுகாக்கிறது. சிக்கலான இதயத் துடிப்பு கோளாறுகளுக்கு பாதுகாப்பான திறன்மிக்க மேலாண்மையை உறுதி செய்ய, இந்த நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதன் அவசியத்தையும் முக்கியத்துவத்தையும் இந்த சிகிச்சையின் வெற்றி நிரூபித்திருக்கிறது. இதுவரை நம் நாட்டில் மிக குறைவான எண்ணிக்கையில் சில நோயாளிகளுக்கே இத்தகைய நவீன பேஸ்மேக்கர் பொருத்தும் சிகிச்சைகள் செய்யப்பட்டுள்ளன. என்றார்