தமிழ்நாடு அறக்கட்டளை சார்பில் அமெரிக்காவில் கின்னஸ் சாதனை படைத்த தெருக்கூத்து நிகழ்ச்சி
திரைப்பட இயக்குநர் சங்ககிரி ராஜ்குமார் ஒருங்கிணைப்பில் கின்னஸ் சாதனை படைத்த நிகழ்ச்சி
முந்நூறு கலைஞர்கள் கலந்து கொண்டு கின்னஸ் சாதனை படைத்தனர்
திரைப்பட இயக்குநர் சங்ககிரி ராஜ்குமாரின் ஒருங்கிணைப்பில் அமெரிக்காவில் உள்ள சிகாகோ நகரில் 300க்கும் மேற்பட்ட கலைஞர்கள் கலந்து கொண்ட தெருக்கூத்து நிகழ்ச்சி நடைபெற்றது. உலக அளவில் அதிக கலைஞர்களைக் கொண்டு நடைபெற்ற தெருக்கூத்து நிகழ்ச்சி என்ற கின்னஸ் சாதனையையும் படைத்தது.
முதன்முதலாக கம்போடியா நாட்டிலுள்ள அங்கோர்வாட் எனுமிடத்தில் உள்ள ஆலய வளாகத்தில் அரங்கேற்றம் செய்தோம். அதற்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது. அங்குள்ள தமிழர்கள், தமிழர் அல்லாதவர்கள் என பலரும் இந்த தெருக்கூத்து கலையை கொண்டாடிய விதம் என்னுள் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. அந்தத் தருணத்தில் இந்த தெருக்கூத்து கலை மிகப்பெரிய அளவிலான கலை வடிவம் என்பதை உணர்ந்தேன்.
இந்த நிகழ்ச்சியில் கிடைத்த வெற்றியின் மூலம் அமெரிக்காவில் உள்ள அனைத்து மாகாணங்களிலும் இந்த பிரம்மாண்டமான தெருக்கூத்து கலை நிகழ்ச்சியை நடத்த திட்டமிட்டிருக்கிறோம். நாங்கள் படைத்த இந்த சாதனையை நாங்கள்தான் மீண்டும் முறியடிப்போம். தெருக்கூத்து கலையை எந்தெந்த நாடுகளுக்கு எல்லாம் எடுத்துச் செல்ல முடியுமோ அங்கெல்லாம் ஒரு விழாவாக எடுத்துச் சென்று நடத்த வேண்டும் என்பதுதான் எங்களின் எண்ணமாக இருக்கிறது. சங்ககிரி ராஜ்குமார் போன்ற கலைஞர்கள் மேலும் வரவேண்டும். இந்த கலையை அமெரிக்காவில் மட்டுமல்லாமல் இந்தியாவிலும் பிரம்மாண்டமாக நடத்தப்பட வேண்டும்,” என்றார்.