Hanuman – திரைவிமர்சனம்
கதைக்கரு:
ஆன்மீகமும் சூப்பர் ஹீரோ கலந்து ஒரு பெரிய கமர்ஷியல் படமாக வெளிவந்திருக்கும் ஹனுமன். சிறு வயதில் இருந்தே சூப்பர் ஹீரோவாக நினைக்கும் வில்லன், எப்படி தான் ஆசைப்பட்டதை அடைகிறார் ? ஹீரோ கடவுள் சக்தியை பயன்படுத்தி வில்லனை வென்றாரா ! இல்லையா ! என்பதே படத்தின் மீதி கதை.
இந்த பொங்கலுக்கு ரிலீஸ் ஆகி பட்டையை கிளப்பி ஓடி கொண்டிருக்கிறது காட்சிகள் ரசிகர்களை வெகுவாக ஈர்த்திருக்கிறது குறிப்பாக கிளைமாக்ஸ் காட்சிகள் மிரள வைத்திருக்கிறது
படத்தில் வில்லனாக வரும் வினய், மற்றும் வரலக்ஷ்மி நடிப்பில் மிரட்டி இருக்கின்றனர் படத்திற்கு பெரிய பலம் ஆன்மீகமும் திரைக்கதையின் வேகமும் ரிலீஸ் ஆன படங்களை முந்தியிருக்கிறது. இயக்குனர் பிரஷாந்த் ஷர்மாவுக்கு வாழ்த்துக்களும், பாராட்டுகளும்.
மொத்தத்தில் ” ஹனுமன் ” உச்சத்தில்.