கதைக்கரு:
மூன்று நண்பர்கள் ஒரு மெடிக்கல் கடையில் ஒன்றாக வேலை செய்து வருகிறார்கள். அந்தக் கடையின் உரிமையாளர் கடையை விற்க முடிவெடுக்க, அதை அவர்களே வாங்கிக்கொள்ள முடிவு செய்கிறார்கள். ஆனால், அதற்காக அவர்கள் சேமித்து வைத்த பணம் திருடப்படுகிறது. இந்த நிலையில், ஊருக்குச் சென்று சொத்தை விற்று பணத்தைத் தயார் செய்ய முடிவெடுக்கிறார். அவர்களில் பயணத்தின்போது அவர்களது வண்டி பஞ்சராகிறது. அதைச் சரிசெய்யக் காட்டுக்குள் இருக்கும் ஒரு பஞ்சர் கடைக்குச் செல்கிறார்கள். அங்கே சென்றதும் என்ன நடக்கிறது இதன் பின்னணி என்ன? என்பதே ‘ஆகக்கடவன‘ படத்தின் மீதி கதை.
“பிரபஞ்ச விதி” படிதான் இங்கே எல்லாம் நடக்கிறது. அடுத்து என்ன நிகழப்போகிறது என்பதை நாம் முடிவு செய்வதில்லை. நம்மை சுற்றி இருக்கும் சமூகம் அதை முடிவு செய்கிறது என்ற கருத்தை மையமாக வைத்து எடுத்திருந்தாலும், திரைக்கதையில் சற்று தொய்வு ஏற்படுகிறது.
வில்லனாக வரும் நடிகர்கள் ஆரம்பத்தில் இருந்தே முறைத்து கொண்டு இருப்பதால் இப்படி ஒரு வில்லங்கம் இருக்கும் என்பது முன்பே கணிக்க படுகிறது. பின்னணி இசை சற்று உயிர்ப்பை கொடுக்கிறது. பெண்கள் இல்லாமல் முழுக்க ஆண்களை வைத்தே சுவாரஸ்யத்தை கொடுத்த இயக்குனருக்கு தர்மா வாழ்த்துக்கள்.
மொத்தத்தில் ” ஆகக்கடவன ” புதிய முயற்சி.