ராமாயணம் தி லெஜெண்ட் திரைப்படம் விமர்சனம்
கதைக்கரு:
இதிகாச கதையான ராமாயணம் நவீன தொழில் நுட்பத்தை பயன்படுத்தி குழந்தைகைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ரசிக்கும் வகையில் எடுக்கப்பட்டிருக்கும் “ராமாயணம் தி லெஜெண்ட் திரைப்படம்.
சீதையை தேடிச்செல்லும் ராமன் வானரப்படைகளின் உதவியுடன் ராவணனை வீழ்த்தி, சீதையை மட்டுமல்லாமல் அனைவரையும் மீட்டது போன்ற நிகழ்வை மையப்படுத்தி எடுத்திருக்கின்றனர்.
இப்படத்தில் முக்கிய காட்சிகளான அனுமன் மலையை பேர்த்தெடுத்து வரும், காட்சி ஜடாயுவின் சண்டை காட்சி, இப்படி பல காட்சிகளை பிரமாண்ட கிராபிக்ஸ் காட்சி மூலம் அசத்தியிருக்கின்றனர்.
இப்படத்தின் கதாபாத்திரங்களுக்கு குரல் கொடுத்திருக்கும் ராமன் கதாபாத்திரத்திற்கு செந்தில்குமார் சீதைக்கு குரல் கொடுத்திருக்கும் டி மஹேஸ்வரி ராவணனுக்கு குரல் கொடுத்திருக்கும் பிரவீன் குமார் அசத்தியிருக்கின்றனர்.
ராமாயண கதைகள் இதற்கு முன்பு பல்வேறு பரிமாணங்களில் வந்திருந்தாலும் இப்படம் சற்று சுவாரஸ்யமாக அமைத்ததற்கு படக்குழுவினருக்கு பாராட்டுக்கள்.