Chiclets Movie – திரைவிமர்சனம் I Cinema5D

Chiclets Movie – திரைவிமர்சனம்:

கதைக்கரு:

இப்படத்தில் மூன்று கதாநாயகிகள் மூன்று கதாநாயகர்கள். இவர்களின் பெற்றோர்களும் குடும்ப நண்பர்களாக இருக்கின்றனர். பெற்றோரின் கனவானது இவர்களை நல்ல நிலைமைக்கு கொண்டு செல்ல வேண்டும் என்று. ஆனால் இவர்களோ ! இளமை பருவத்தில் பெற்றோர்களுக்கு தெரியாமல் அவுட்டிங் செல்கின்றனர். இது ஒரு கட்டத்தில் பெற்றோர்களுக்கு தெரிய வருகிறது. இவர்களை தடுக்க பெற்றோர்கள் எடுக்கும் முயற்சி வெற்றி பெற்றதா ? இல்லையா?  இம்மூன்று ஜோடிகளும் நினைத்தது நடந்ததா !  என்பதே படத்தின் மீதி கதை.

 

இப்படம் பக்காவான அடல்ட் மூவி. சொல்ல வந்தது என்னவோ நல்ல கருத்தாக இருந்தாலும், அதை பட்டும் படாமல் சொல்லி இருக்கவேண்டும். ஆனால் இப்படத்தில் சில காட்சிகள் ஏற்புடையதாக இல்லை. படத்தில் நடித்த நடிகர்கள் பெரும்பாலும் புதுமுகம் என்றாலும், பெற்றோர் கதாபாத்தில் நடித்த ஸ்ரீமன் உட்பட மற்றவர்களும் நல்ல நடிகர்கள் அவர்கள் கூட ஏனோ தானோ என்று நடித்து விட்டு போயிருக்கின்றனர்.

மொத்தத்தில் ‘ Chiclets ‘சுமார் ரகம்.

chicletschiclets cast and crewchiclets movie reviewchiclets thiraivimarsanam
Comments (0)
Add Comment