Birthmark திரைவிமர்சனம் – Cinema5D

Birthmark திரைவிமர்சனம் :

கதைக்கரு

இந்த படத்தின் நாயகன் டேனியல் ( ஷபீர் ) நாயகியாக ஜெனிபர் ( மிர்னா ). இவர்கள் இயற்கையான முறையில் குழந்தை பெற்றுக்கொள்ள பர்த்திங் வில்லேஜ்க்கு செல்கின்றனர். அடுத்தடுத்து அங்கே நடக்கும் மர்மங்கள், நாயகனின் குழம்பிய மனநிலை, இவற்றில் தப்பித்து வெளியேற நினைக்கும் நாயகி. இறுதியில் என்ன நடந்தது ? என்பதே படத்தின் மீதி கதை.

 

போரில் ஏற்பட்ட துயரமான சம்பவங்களால் மனதளவில் பாதிக்கப்பட்ட டேனியல். மனைவியின் மீதி அக்கறையும், அதே சமயத்தில் சந்தேகம் என தன்னுடைய கதாபாத்திரத்தை திறம்பட கொடுக்க முயன்றிருக்கிறார். நாயகியான மிர்னா நடிப்பு அற்புதம். கர்ப்பிணி பெண்ணாக ஒவ்வொரு காட்சியிலும் கதாபாத்திரத்தை விட்டு விலகாமல் அசத்தியிருக்கிறார். மற்ற நடிகர்கள் எதார்த்தம்.

படத்தின் திரைக்கதை பார்ப்பவர்களுக்கு சற்று குழப்பத்தை ஏற்படுத்துகிறது. சொல்ல வேண்டிய சில விஷயங்களை ஆழ் மனதில் தோன்றுவது போல காட்சியமைப்புகள் உருவாக்கப்பட்டு கதையை விட்டு வேறு எங்கேயோ கூட்டி செல்கிறது.

படத்தின் பின்னணி இசை கூடுதல் பலம். ஒளிப்பதிவு ஒவ்வொரு காட்சியிலும் அசத்தியிருக்கிறது. திரைக்கதையில் கொஞ்சம் கவனம் செலுத்தியிருந்தால் நன்றாக இருந்திருக்கும்.

மொத்தத்தில் ‘ BirthMark ‘ சற்று தொய்வு.

birthmarkbirthmark cast and crewbirthmark full moviebirthmark moviebirthmark movie reviewbirthmark songsbirthmark thiraivimarsanambirthmark trailer
Comments (0)
Add Comment