அரிமா பட்டி சக்திவேல் – திரைவிமர்சனம் :
கதைக்கரு :
அரிமா பட்டி சக்திவேல் படத்தின் கதை. சாதி விட்டு வேறு சாதியில் திருமணம் செய்தால் ஊரை விட்டு ஒதுக்கி வைக்கும் பழக்கம் இந்த கிராமத்தில் இருக்கிறது. ஒரு காதல் ஜோடி பஞ்சாயத்தை மீறி காதலித்து திருமணம் செய்கின்றனர். இதை எதிர்க்கும் பஞ்சாயத்தை மதிக்காமல். ஊரை விட்டு வெளியேறாமல் இருக்கின்றனர். இதனால் ஒரு கும்பல் அவர்களை கொலை செய்கின்றனர். இப்படியாக படத்தின் கதை ஆரம்பிக்க, படத்தின் நாயகன் இதே போல் படிக்கும்பொழுதே மாற்று சாதி பெண்ணை காதலித்து ஒரு கட்டத்தில் திருமணமும் செய்கிறார். இவரை இந்த ஊர் பஞ்சாயத்து என்ன செய்தது. இந்த காதல் ஜோடி ஒன்று சேர்ந்தார்களா ! என்பதே படத்தின் மீதி கதை.
படத்தின் நாயகன் பவன் அரிமா பட்டி சக்திவேல் என்று பேர் எடுக்க ஆசைப்பட்டு சினிமாவில் நுழைந்திருக்கிறார். பல இடங்களில் அவரின் நடிப்பு பெரிதாக ஒன்றும் இல்லை. பிளாஷ் பேக் கில் படிக்கும் பருவத்தில் சற்று கூட பொருந்தவில்லை. நடிப்பு பயிற்சி பெற்று அடுத்த படத்திலாவது முயற்சிக்க வேண்டும். நாயகி அருமையாக நடித்திருக்கிறார். சார்லி வழக்கம் போல் அசத்திருக்கிறார். பின்னணி இசையும், ஒளிப்பதிவும் ஓரளவுக்கு பொருந்தியிருக்கிறது.
மொத்தத்தில் “ அரிமா பட்டி சக்திவேல்” சுமார் ரகம்.